உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை ஒட்டி மாணவர்கள் விழிப்புணர்வு..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை ஒட்டி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனை படைத்தனர்.
அனைவரும் மரங்களை நட வேண்டும் என வலியுறுத்தி மாணவர் சமூகத்தினர் கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி ஐந்தரை கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
இதில் உள்ள 2 பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றியப்படியும் கையில் மரக்கன்றுகளை ஏந்திய படியும் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் இடுப்பில் வளையத்தை சுழற்றிய படியும் சாதனை படைத்தனர். இவர்களின் இந்த சாதனையை உலக நோபல் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.





