சென்னை கல்லூரி வாசலில் வைத்து மாணவி குத்தி கொலை..!
கல்லூரி வாசலில் மாணவியை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயிலை சேர்ந்த அஸ்வினி கேகே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்த நிலையில் கோபமடைந்த அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த அழகேசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். கே கே நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
அழகேசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்ட நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.





