--- --:--:-- --

சிவகங்கையில் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவர் பலி..!

6

சிவகங்கை மாவட்டம் சார்லஸ் மெட்ரிக் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சருகநீந்தல் என்ற இடத்தில் சாலை மண் குழியில் இறங்கி சாலையோர பள்ளத்தில் வாகனம் தழை குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

விபத்தின் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மாணவனின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தாய் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் கற்பகம் மகனின் இறப்பு தாங்காமல் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

வெள்ளைச்சாமி – கற்பகம் தம்பதியினருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த ஒரே மகன் ஹரி வேலன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon