--- --:--:-- --

நடந்தே சென்று வாக்கு சேகரித்த திமுக தலைவர் ஸ்டாலின்..!

8

கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூரில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

 

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பிரச்சார வாகனம் சென்றபோது திடீரென கீழே இறங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து கிருஷ்ணகிரி ரவுண்டானா வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே சென்ற வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது ஸ்டாலினுடன் மக்கள் பலரும் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon