--- --:--:-- --

அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் காரமடை அருகே ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் !!!

10.1

ண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்தார்.

 

அதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்டம் காரமடை ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே எடுத்து கூறப்பட்டது.

 

மேலும்,பொதுமக்களிடம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.பின்னர்,சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகள் குறித்து நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குறைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

 

மேலும்,அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை என்ற துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு கூட்டத்தில் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உள்ள குறைகள் குறித்த மனுக்களையும் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் பெற்றுக்கொண்டார்.

 

மேலும்,தமிழக அரசின் தோல்விகள் குறித்தும், அ.தி. மு.க.வை.நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.நேற்று துவங்கி 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செந்தில்,முன்னாள் ஒன்றிய செயலாளர் புஜங்கனூர் கந்தசாமி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குரு பிரசாத்,மாணவரணி துணை அமைப்பாளர் மேடூர் கணேசன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாயனூர் பிரதீப்,பிளிச்சி கவுண்டனூர் கணேசன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் பிரதாப்,குமரேசன்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon