அண்ணாமலையிடம் அளித்த மனு சிறிது நேரத்தில் நடுரோட்டில் கிடந்ததால் அதிர்ச்சி..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அளிக்கப்பட்ட மனு வீதியில் கிடந்ததாக மகளிர் குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்பொழுது திருப்பத்தூர் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலையிடம் மகளிர் குழு ஒரு மனுவை அளித்துள்ளனர். அந்த மனு பெரிய கடை வீதி சாலையில் கீழே கிடந்ததை பார்த்த மகளிர் குழுவினர் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்தனர்.





