--- --:--:-- --

மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிவாலய ஓட்டம்..!

2

ன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சில பக்தர்களின் சிவாலய கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம்.

 

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம் பன்னிரண்டாவது சிவாலயம் ஆன சங்கரநாராயணன் கோயிலில் முடிவடைகிறது. கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் விரதம் இருந்து ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சிவராத்திரி தினத்தை ஒட்டி நடைபெறும் இந்த ஓட்டம் குமரி மாவட்டத்தை தவிர வேறு எங்கும் நடைபெறாது என்பதால் வரலாற்று சிறப்புமிக்கதாக இது பார்க்கப்படுகிறது.

 

Right Menu Icon