இன்று முதல் டாஸ்மாக் மூடல்..!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் நலன் கருதி 500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்கள் நாளை (ஏப்ரல் 22) அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம், ஏப்ரல் 23-ம் தேதி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர்.





