--- --:--:-- --

சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்..!

8

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சென்னையில் 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா உரையாற்றவுள்ளார்.

 

இதனையொட்டி கோட்டை பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை கோட்டை முழுவதும் நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

 

சென்னையில் முக்கிய இடங்களான விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சுற்றி காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon