2 கோடியை தாண்டியது த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை..!
த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது. தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது.
இதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு த.வெ.க.வினர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. 34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.





