கொரொனா தொற்றுக்கு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு..!
சென்னையில் கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். குரோம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் தமிழரசிக்கு சில நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
வேண்டிலேட்டர் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போது பலனின்றி நேற்றிரவு தமிழரசி உயிரிழந்தார். 62 வயதான தமிழரசி திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 22 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவராக சேவையாற்றியுள்ளார். மாவட்ட மருத்துவ அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.






