தெலுங்கானாவில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க தடை..!
தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசின் முடிவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் இடைக்கால தடை விதித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பள்ளிகள் திறப்பை ஒருவாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகளில் கொரொனா பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு அரசு கட்டாயப்படுத்த கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதற்கிடையே மாநிலமும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.






