பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. தலைமை ஆசிரியர் கைது..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் தலைமை ஆசிரியர் பிரிட்டோலி பணியாற்றி வருகிறார். இதில் ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய பொழுது தலைமை ஆசிரியர் ஒரு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். பின் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் பிரிட்டோ கைது செய்யப்பட்டார்.





