--- --:--:-- --

தமிழகத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி… மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வழக்கில் கை விரித்தது உச்ச நீதி மன்றம்

xcfh

ருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரியும், நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது. இந்த ஆண்டு செயல்படுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது தமிழகத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது, 40 நாட்கள் ஆகியும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வது பெரும் சர்ச்சையாகியுள்ளது, இந்த விவகாரத்தில் ஆளுநர் உள் நோக்கத்துடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

 

இதற்கிடையே அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசும், திமுகவும் உச்ச நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. மேலும் நடப்பு ஆண்டிலேயே இந்த இட ஒதுக்கீடை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

கை விரித்தது உச்ச நீதி மன்றம்

 

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நடப்பு ஆண்டிலேயே இந்த இட ஒதுக்கீடை செயல் படுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி கோரிக்கையை நிராகரித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு, மருத்துவ படிப்பு கனவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.


வைகோ கண்டனம்

இதற்கிடையே இந்தத் தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.

 

இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon