--- --:--:-- --

தேமுதிக தலைமையில் 3-வது அணி… விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தடாலடி

download (1)

ரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் 3-வது அணி அமையும் எனவும், தனித்துப் போட்டியிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் கூட்டணி தொடர்பான கூட்டல் கழித்தல் கணக்குகளிலும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, வி.சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கொங்கு நாடு, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஒரே இடத்தில் மட்டுமே வென்றது.

 

வரும் சட்டசபைத் தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதே கட்சிகள் இடம் பெறுமா?, என்பது சந்தேகமாகவே ள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளுமே இப்பொழுதே லடாய் செய்து வருகின்றன. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு, ஆட்சியிலும் பங்கு என பாஜக திட்டம் போடுகிறது. இதனை அதிமுக தரப்பு ரசிக்கவில்லை என்றே கூறலாம்.

 

பாமகவும் சமீப நாட்களாக அதிமுக அரசை கடுமையாக சாடி வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றால் கூடுதல் தொகுதிகள், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு என பாமகவும் கண்டிசன் போட்டு நெருக்கடி கொடுக்க திட்டம் போடுகிறது. இதனையும் அதிமுக ஏற்காவிட்டால் ஒன்று தனித்துப் போட்டி இல்லா விட்டால் தனது கண்டிசனுக்கு ஓரளவு ஒப்புக் கொண்டால் திமுக அணியில் பாமக இணையலாம் என்றும் தெரிகிறது.

 

விஜய பிரபாகரன் தடாலடி

 

 

இந்நிலையில் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதை விரும்பவில்லை என்றே சமீப நாட்களாக அக்கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் வெளிப்படுத்தி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் 3-வது அணி அமையும்; தேர்தலை தனியாக சந்திக்க எந்தவித தயக்கமோ அச்சமோ இல்லை என விஜயபிரபாகரன் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மதிமுக, வி.சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜி.கே.வாசனின் தமாகா ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் 3-வது அணி அமைத்து போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon