--- --:--:-- --

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

9

பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை $60\%$-லிருந்து $50\%$-ஆகக் குறைக்கக் கோரி 2010-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

 

இது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அரசின் கொள்கை முடிவை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon