ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையிலிருந்து மங்களூரு மற்றும் கொல்லத்திற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர் – மங்களூரு இடையே வரும் ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3, அக்டோபர் 3 ஆகிய தேதிகளிலும் இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.





