காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி !!!
காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக முழுவதும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தூய்மை பணிக்கான திட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் செயல்படுத்தி வருகின்றனர்.

இதே போல் கோவை எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்,தூய்மையை நோக்கி ஒரு படி உயர்வோம்,பூமியை பிளாஸ்டிக்கிலிருந்து காப்பாற்றுவோம் என்ற வாசங்கங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர்கள் தீயணைப்புத்துறைக்கு முன்புறம் உள்ள சாலையில் மனித சங்கிலி கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





