--- --:--:-- --

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் : ஜெயக்குமார்

4

சிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதுகொடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவுக்கு கொடுக்கப்படும் பில்டப் செயற்கையானதாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்து விட வேண்டியதுதான். அதில் பெரிய விஷயம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

 

இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சசிகலா நினைப்பது நடக்க போவதில்லை என்றும் கூறிய அவர் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Right Menu Icon