நானும் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் : சிவகார்த்தி
சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார். எழும்பூரில் உள்ள 178 ஆண்டு பழமையான பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை காவலர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் போலீசார் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்ற முக்கிய பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங் காட்சியாகத்தை சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நானும் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்றும் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.




