--- --:--:-- --

ஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள்…! ஆண்டு விழா நடத்தியும் அசத்தல்!!

00fd1e81-c89a-4655-9db3-7c0f1f5829e4

ஆர்.எஸ் மங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள், ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடினர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியில் ஆரம்ப காலங்கள்ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

பின்னர் பெண்களுக்கென்று தனியாக பள்ளி திறக்கப்பட்டதாலும், தனியார் பள்ளிகள் அதிகரித்தாலும், மக்களிடையேயும் தனியார் பள்ளி மோகம் அதிகரித்ததால் இந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வந்தது.

 

இந்த நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து மாணவர்களை சேர்த்தனர். இதனை கொண்டாடும் வகையில் பள்ளியில் ஆண்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினர் இந்த விழாவிற்கு திருவாடானை நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவிற்கு முன்னதாக ஆர்.எஸ் மங்கலம் பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, மற்றும் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், விளையாட்டு. கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சசிகுமார், செயலாளர் பகுருதீன் மற்றும் நிர்வாகிகள் யெ்திருந்தார்கள். ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Right Menu Icon