மீண்டும் எகிறியது தங்கம் விலை..!
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த ஜூன் 24, 25ஆம் தேதிகளில் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை அளித்தது.
தொடர்ந்து நேற்று மட்டுமே ஒரே நாளில் 2 முறை அதிரடியாக உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.105,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் மாலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.106,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் ரூ.89,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





