மாணவர்களின் சாதி விவரத்துடன் ஐ.டி கார்டு..!
செங்கோட்டையன், பட்டா, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை அனைத்தும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அதன் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்.
அனைத்து திட்டங்களையும் இணையம் மூலம் கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதற்கென அடையாள அட்டையை வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம்.
அதற்கான பணிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மாணவரின் முகவரி, சாதி சான்றிதழ், இரத்த பிரிவு, ஆதார் அட்டை, தொலைப்பேசி எண் என அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்கும். முதற்கட்டமாக 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம் எனத் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.





