புதுமண தம்பதிகளுக்கு ரூ.5,000 – தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பு..!
ரயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. வெட்டிங் சூட் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வழங்கி கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டி பின்புறம் வேண்டும் என்றால் கூடுதலாக 1,500 ரூபாய் செலுத்த வேண்டும் மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் 3,000 ரூபாய் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





