கோவையில் அரசு பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்..!
கோவையில் பேருந்தில் பயணம் செய்த செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நெல்லையை சேர்ந்த இளம் பெண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை செவிலியாக பணியாற்றி வருகிறார்.
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் அவர் பயணம் செய்த பொழுது அதே நேரத்தில் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் பயணம் செய்துள்ளார். இரவு நேரம் என்பதால் அந்த இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சடைந்த பெண் இது குறித்து நடத்துனரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அந்த இளைஞர் இளம் பெண்ணை தொந்தரவு செய்ததால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





