--- --:--:-- --

தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஏரியில் செத்து மிதந்த மகன்..!

10

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மகனை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில் ஏரியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே முரளி ஹேமாவதி தம்பதியின் மகன் ஷியாம் சுந்தர்.

 

இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். ஷாம் சுந்தர் செல்போனில் அதிக நேரம் வீடியோ கேம் சாட்டிங் செய்ததால் அவரது தாயார் கண்டித்ததுடன் செல்போனை மகனிடம் இருந்து பறித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரத்தில் வீட்டை விட்டு ஷாம் சுந்தர் வெளியேறியுள்ளார். இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். இந்நிலையில் ஷியாம் சுந்தரின் சடலம் ஏரியில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர்.

 

உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேறிய மகன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon