--- --:--:-- --

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ராக் முதலிடம், அக்ஷய் 6வது இடம்..!

8.1

லக அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக ஊதியம் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

ராக் என்று மல்யுத்த ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இந்திய மதிப்பில் சுமார் 675 கோடி ரூபாய் ஊதியம் நீட்டி இருப்பதாகவும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

ரையாண்ட் ரொனால்ட்ஸ் இரண்டாவது இடத்திலும், மார்க் வால்பர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக கூறும் போர்ப்ஸ் பத்திரிக்கை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சுமார் 362 கோடி ரூபாய் ஊதியத்துடன் ஆறாவது இடம் வகிப்பதாகவும் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon