--- --:--:-- --

கடனை செலுத்த தவறினால் ஆதார் அட்டையை முடக்குவோம் என மிரட்டல்..!

7

டனை செலுத்த தவறினால் ஆதார் அட்டையை முடக்க போவதாக நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுய உதவிக் குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

 

மதுரை சக்கிமங்கலம் அருகே அன்னை சத்யா நகர் பகுதியில் வசிக்கும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 130 பெண்கள் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கொரொனாவால் வருமானம் இல்லாத நிலையில் கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கடனை திருப்பி கேட்டு தனியார் நிதி நிறுவனம் அழுத்தம் தருவதோடு ஆதார் அட்டையை முடக்கி விடுவதாக மிரட்டல் விடுப்பதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon