பாரதிய ஜனதா தலைமையில் தான் கூட்டணி அமையும் எனக்கூறிய வி.பி.துரைசாமி..! அதிமுகவில் சலசலப்பு..!
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அக்கட்சி அறிவித்திருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேசிய அந்த கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி தமிழகத்தில் திமுக, அதிமுக என்று இருதுருவ அரசியல் மலையேறி விட்டதாக கூறினார்.
வரும் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். துரைசாமியின் பேச்சு அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணியில் சலசலப்புக்கு வித்திட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவுக்கு பதிலாக மத்திய ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்தினாலேயே பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்க முடியுமா என்று அதிமுகவில் முணுமுணுப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்தில் இனி திமுக, பாரதிய ஜனதா இடையேதான் போட்டி என்ற விபி துரைசாமியின் பேச்சு அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







