பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது விவசாயிகளுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு – அண்ணாமலை
பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஏழு கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்துவிட்டது, விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக்கு வரும் முன் பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் இப்பொழுது அந்த அறிக்கையை மறந்து விட்டார் போல என கூறியுள்ளார்.
அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.





