--- --:--:-- --

ரஜினிகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது..!

1

டிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை நலமாக உள்ளது என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. அதேபோல், பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், இன்று காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதால், முன்கூட்டியே பேசியபடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்துள்ளார்.

 

“ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.” என ஆளுநர் ரவி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon