--- --:--:-- --

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு..!

2

க்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் அழைக்கவில்லை என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை தமிழக அரசு மறுத்துள்ளது.

 

மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு கருத்து கேட்டு வருகிறது. சென்னையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் குறித்து தமிழக அரசுக்கு மக்களவை செயலகம் தெரிவித்திருந்தது.

 

அந்த கூட்டத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை அழைக்கவில்லை என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளது.

 

மாநில அரசு பிரதிநிதிகள் வகுப்பு வாரிய மாநில சிறுபான்மையினர் ஆணையம் இதில் சம்மந்தப்பட்ட அமைப்புகள் பங்கேற்றதாக கூறியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரதிநிதிகள் பார் கவுன்சில் பிரதிநிதிகள் வழக்கறிஞர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று கருத்து தெரிவித்ததாக கூறியுள்ளது.

 

சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்கவில்லை என எதிர் கட்சி தலைவர் கூறுவது உண்மைக்கு மாறானது எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

 

Right Menu Icon