ரஜினிக்கே ’ஷாக்’ கொடுத்தேன்…!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சென்னை புதியதல்ல. பிரபுதேவா இயக்கியுள்ள தபாங் 3 பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்திருந்தார். இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்கா மற்றும் சுதீப் என பலர் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் தனக்கும் சென்னைக்குமான தொடர்புகளை பகிர்ந்து கொண்டுள்ளார். நான் ஒரு நடிகராக ஆவதற்கு முன்பே சென்னையுடன் ஒரு ஆழமான தொடர்பை கொண்டிருந்தேன். நான் சென்னைக்கு முதன் முறையில் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக வந்தேன்.
அந்த விளம்பரம் மீனவர் பகுதியில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு ரேவதியுடன் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்தேன். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சினிமா வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அந்த படம் இங்கு படமாக்கப்பட்டது.
சென்னையில் நான் நிறைய பார்ட்டி வைத்திருக்கிறேன். இந்த ஊரில் சிறந்த உணவுகளை ருசித்து பார்த்து இருக்கிறேன். நான் தமிழ் சினிமாவை தீவிரமாக பார்ப்பேன். விஜய்யின் போக்கிரி, விக்ரமின் சேது ஆகிய இரண்டு படங்களும் இங்கிருந்து பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேசிய சல்மான் கான் தான் ஒரு ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் என்பதை குறிப்பிட்டார். சங்கர் 2.o பின் ஆடியோ வெளியீடு மும்பையில் நடந்த போது நான் அந்த நிகழ்விற்கு நுழைந்தேன். ரஜினி அங்கேயே என்னை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்.
ஆம் நாம் அங்கு அழைக்கப்படாத விருந்தாளியாக போனேன். அவரை பார்க்க விரும்பினேன். அதனால்தான் அங்கு சென்றேன். அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது நிறைய நேரம் செலவிட்டு உள்ளேன். அதற்கு முன்னதாக அவர் என் தந்தையுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.





