குஷ்புவின் மகள் அவந்திகா திருமணம்..!
கோவாவில் நடந்த குஷ்புவின் மகள் அவந்திகா திருமண நிகழ்வில், சிரஞ்சீவி, த்ரிஷா, அனில் கபூர் என இந்தியத் திரை உலக நட்சத்திரங்கள் திரண்டனர். பிரபல நட்சத்திர தம்பதிகளான குஷ்பு மற்றும் சுந்தர் சி-யின் மூத்த மகள் அவந்திகா சுந்தர், தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரவண் ஸ்ரீனிவாசனை கோவாவில் வியாழக்கிழமையன்று கரம்பிடித்தார். தென்னிந்தியத் திரை உலகம் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களும் இந்தத் திருமண விழாவில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பெரும்பாலான நட்சத்திரங்கள் தென்னிந்தியப் பாரம்பரிய ஆடையான வேட்டி-சட்டை மற்றும் புடவை அணிந்து வந்திருந்தனர். அனைவரும் வெள்ளை மற்றும் தங்க நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்திருந்தது, கவனம் ஈர்த்தது.
முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து திருமணத்திற்கு குஷ்பு குடும்பத்தினர் அழைப்பிதழை வழங்கியிருந்தனர். எனினும், அலுவல் காரணங்களால் முதலமைச்சர் இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.





