--- --:--:-- --

டெல்லியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வெப்ப நிலை

11

டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைந்த வெப்பநிலையாக நேற்று 10.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

 

இதே நிலை இன்றும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் குளிர் காரணமாக சூரிய ஒளியைக் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லியை போன்றே பெரும்பாலான வட மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon