தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை அடுத்த பூந்தமல்லியில் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
சேலம் மாவட்டத்தில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். தொடர் மழை காரணமாக சாமிநாதபுரம், மார்க்கபந்து சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சென்ற முறை அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஓடைகள் சரிவர தூர்வாரப்படாத இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.





