--- --:--:-- --

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு..!

7

புதுச்சேரியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையில் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

26 ஆம் தேதி மொழி படத்திற்கான தேர்வு தொடங்கி ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

 

9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு நண்பகல் தேர்வு நடைபெறும். தேர்வு முடிந்ததும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக ஆறாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon