மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 4 தினங்களே உள்ளது.
நோய் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு தொடருமா, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அரசு அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கினை நீட்டிப்பதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியதாவது:

ஊரடங்கின் போது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை என 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அப்போது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம். எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.கடைகளும் திறந்து இருக்கும் என்றார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






