புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாட்டால் புற நோயாளிகள் அவதி!
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு என்பது அமல் படுத்தப் பட்டுள்ளன. தமிழகப் பகுதிகளில் இருந்து யாரும் உள் நுழைய கூடாது என்ற உத்தரவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரொனா நோயால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் புதுச்சேரி அருகில் உள்ள தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மட்டும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தினந்தோறும் 8,000 புறநோயாளிகள் வருகின்றனர். மேலும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவர்களும் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதிய நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.







