--- --:--:-- --

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

7

மருத்துவ படிப்புகளில் அகில இந்தியா ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி திமுக, அதிமுக, திராவிடர் கழகம் ஆகியவை தொடுத்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்ஜூன் 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

 

அதேசமயம் மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதாரத் துறையும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வழக்கு தொடுத்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்த மனு குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மற்ற அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்குகளுடன் சேர்த்து ஜூன் 2ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon