--- --:--:-- --

ராணுவ அதிகாரி எனக்கூறி புல்லட் ஆசைகாட்டி பணமோசடி!

5

புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரிடம் இராணுவ அதிகாரி போல் நடித்து எண்பதாயிரம் ரூபாய் வரை மோசடி செய்த ராஜஸ்தான் மாநிலத்தவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

 

திருமலைசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞரிடம் வாட்ஸ்அப் மூலமாக நட்பை ஏற்படுத்திக் கொண்ட நபர், தான் ராணுவ அதிகாரி என்றும், தன்னிடம் உள்ள புல்லட்டை ஓஎல்எக்ஸ் மூலமாக விற்பனை செய்ய விருப்பம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

 

இதனை நம்பிய கணேஷ்குமார் அது இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக கூகுல் பே மூலமாக அந்த நபருக்கு 80 ஆயிரத்து இருநூறு ரூபாயை பணபரிமாற்றம் செய்துள்ளார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.

 

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் இதே போன்று ஏராளமான இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon