--- --:--:-- --

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்..! உடனடியாக வெளியேற சொன்ன இரக்கமற்ற மருத்துவமனை..!

9

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எழும்பூரில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கருவுற்றார். அவருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் வெளியேறி சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் மூலம் அந்த பெண் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மருத்துவர்களின் அரவணைப்போடு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அந்த தாய் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon