--- --:--:-- --

விண்ணுக்கு சமோசாவை அனுப்பிய பிரபல உணவகம்..!

14

பிரபல சிற்றுண்டி உணவகம் ஆன சாய்வாலா தனது உணவுப் பொருளான சமோசாவை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்திய சிற்றுண்டி உணவகம் சாய்வாளா தனது உணவுப் பொருட்களை பிரபலப்படுத்தும் பொருட்டு வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளது.

 

ஹீலியத்தால் ஆன பலூனை ஜிபிஎஸ் கருவி பொருத்தி பாராசூட் வடிவில் வடிவமைத்து சமோசா உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து பேக் செய்து விண்ணுக்கு அனுப்பியது.

 

ஆனால் அதற்கு மறுநாள் சமோசாவை சுமந்து சென்ற பலூன் பிரான்சில் கீழே விழுந்து மரத்தில் சிக்கியது. இதுகுறித்து சாய்வாளா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் தகவல் அளித்ததைப் பார்த்து நபர் ஒருவர் அந்த இடத்திற்கு சென்று சமோசாவை கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon