--- --:--:-- --

காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு

9.1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தப்பிக்க முயன்ற ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்தனர். தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

(இன்று)வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டியின் ஐ.ஜி. சங்கர், “சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. அதில் ஒன்றை கொலை வழக்காக பதிவுசெய்து ஒரு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்.

 

விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர். மற்றொரு காவலர் முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon