பாமக பேனர் கிழிப்பு..விழுப்புரத்தில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் பாமக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன்னியர்களுக்கான 10 புள்ளி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி விழுப்புரம் பாமக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது திமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாமக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக பேனர் கிழிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பேனர் கிழிக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





