--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரடி உயர்வு..!

1

ர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடைசியாக ஏப்ரல் 1ஆம் தேதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. ஈரான் போர் பதற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் கடந்த மே மாதம் 15ஆம் தேதி அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

 

சென்னையில் கடந்த மே 15ஆம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.67க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.93.14க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு 5 நாட்களிலேயே மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. மே 19 அன்று ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.104.49க்கும், டீசல் லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.11க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தற்போது மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, மே 23ம் தேதியான இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.82 காசுகள் அதிகரித்து 105.31 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை 91 காசுகள் அதிகரித்து 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும் பெட்ரோல் போதிய அளவில் தான் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலையேற்றம் சாமானிய மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon