--- --:--:-- --

தமிழகத்தில் ஆன்லைன் வழியாக வகுப்புகளை தொடர கோரி மனு..!

5

மிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இணைய வழியாக மாணவர்கள் வகுப்புகளை கவனித்து பதிலளிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அப்துல் வஹ்ஹாப் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோரினார். தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் வேறுபட வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும் என்றும் வாதிடப்பட்டது.

 

அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon