செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..?
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன .
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் விதிக்கப்பட்ட தடை.
திருவிழாக்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையும் தொடரும். அதே நேரத்தில் செப்டம்பர் 1 முதல்9, முதல் 12ஆம் வகுப்பு செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தின் அரசு பணியாளர்கள், சிறு வியாபாரிகள் ,தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மருத்துவத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






