புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உணவகத்துக்கு சீல்..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்கப் பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் பல்வேறு உணவகங்கள் உள்ளன. அவை தனியாரிடம் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டு வருகிறது. சில மாதங்களாக நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து உணவுத்துறை, பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேன்டீனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.






