--- --:--:-- --

திருப்பூரில் ரேஷன் பொருள்களுக்கு பணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு..!

2

திருப்பூர் மாவட்டம் ஆலத்தூர் நியாய விலை கடையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கு பணம் வசூலித்தால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த மூன்று மாதங்களாக விலையின்றி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மாதத்தின் முதல் நாளான நேற்று நியாயவிலைக் கடையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பணம் வசூலித்தனர்.

 

நவம்பர் மாதம் வரை ரேஷனில் பருப்பு இலவசம் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்த நிலையில் பணம் வசூலிப்பதாக கூறி மக்கள் வாக்குவாதம் மேற்கொண்டனர். எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றும் ரேஷன் பொருட்களுக்கு விலை வசூலிக்கும் படி மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்டு இருப்பதாகவும் விற்பனையாளர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon